Why do dogs bark only when midnight is approaching?
நாய்கள் அழுத்தமாக குரைப்பது ஏன்?
காரணம் தெரிந்தால் வீட்டுக்கதவை திறக்கமாட்டோம்....
எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தெருவில், ஒரு 8 நாயிக்கு பக்கமாக இருக்கும். வீட்டிலேயே சிறுதொழில் செய்து வருவதால், வேலை முடித்து, சாப்பிட்டுவிட்டு தூங்க, இரவு 12 மணிக்கு மேலாகிவிடும். 11 மணிக்கு வேலை முடியும் நேரத்தில் கூட, ஒரு சத்தமும் இருக்காது. இரவு சாப்பாடு முடித்துவிட்டு தூங்க சென்றால், ஒரு 1 மணிக்கு மேல், நாய்கள் வல்லு வல்லு என்று குரைக்க ஆரம்பித்துவிடும். அப்போ தான் தூக்கமே வர ஆரம்பிக்கும், அந்த நேரத்தில் எல்லா நாய்களும் ஒரு சேர கத்தினால் எப்படி இருக்கும்.? நிறைய நாட்கள் இதன் காரணமாகவே தூக்கம் கெட்டுப்போயிருக்கிறது.
நாய்களுக்கு கேட்கும் திறன் ரொம்பவே அதிகமாம். நான் சிறு வயதாக இருந்த போது, "பூக்கள் மலரும் சத்தம் கூட நாய்க்கு கேட்கும்" என்று உறவினர் ஒருவர் சொன்னதாக நியாபகம், ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் இரவு நேரத்தில் மிக நுண்ணிய ஒலியை கேட்டவுடன், அவை குரைக்க ஆரம்பித்து விடுகின்றன. ஒருமுறை கொசுத்தொல்லை அதிகம் இருக்கிறது என்று, இரவு 2 மணிக்கு எழுந்து, வேப்ப எண்ணெய் ஊற்றி விளக்கு பற்றவைக்க தீக்குச்சியை உரைத்த போதே, எல்லா நாய்களும் கத்த ஆரம்பித்தன.
அதிலிருந்து நாய்களின் கேட்கும் திறனை, எனது அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். இது தவிர, - புதிய நபர்களைக் கண்டால் குறைக்கும்.
- வேறு விலங்குகளையோ அல்லது வேறு நாயை கண்டால் குரைக்கும்.
- வழக்கத்திற்கு மாறாக, குரைப்பதில் அழுத்தம் தெரிந்தால், ஆள் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தமாம்.
- சில நேரங்களில் காரணமே இல்லாமல் குரைக்கும். அப்படி செய்தால், நாய் தனிமையை உணர்கிறது என்று யூகித்துக்கொள்ள வேண்டும்.
தனிமை உணர்வு ஏற்பட்டால், தன்னுடைய நண்பர்களை அழைக்கவும் குரைக்கும். இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், தூரத்தில் ஏதாவது ஒரு நாய் குரைக்க ஆரம்பித்தால், அதற்கு ஆதரவு கொடுக்க, சம்பந்தமே இல்லாத நாய்களும் குரைக்க ஆரம்பிக்கும். சில நேரங்களில் உங்கள் வீட்டில் நாய் குரைத்தால், ஒரு கிலோமீட்டர் வரைக்கும், வெவ்வேறு இடங்களில் உள்ள நாய்கள் குரைப்பதை கேட்க முடியும். நீங்க நினைக்கிற மாதிரி இந்த பேய், பிசாசு நடமாட்டம் எல்லாம் இருக்காது. ரிலாக்ஸ்சா விடுங்க.
Comments
Post a Comment