துயர் தீர்க்க யார் வருவா கடவுளே!?

தேயிலைக்கு பச்சையும்,
தேனீருக்கு சாயமும்.

கொடுத்து இந்த தேசத்திற்கு அடையாளம் குறித்த அந்தஸ்தைக் கொடுத்த அதிமுக்கிய குடிகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள். இவர்களின் துயர் தீர்க்க யார் வருவா கடவுளே!?



இயற்கையின் சீற்றம் ஒரு பக்கம். இருக்கின்ற தலைமைகளின் ஏமாற்றம் மறுபக்கம். இதற்கு மத்தியில் விலங்குகளின் விளையாட்டில் இறக்கின்றதே இந்த கூட்டம். இந்த சமூகத்திற்கு எப்போது விடிவு கிட்டும். இதுதான் சாபக்கேடு என்றால் இதையும் தாங்கி இந்த சமூகம் அழிந்து போகட்டும்.


வந்தோரை எல்லாம் நம்பும் சமூகமே! உனக்கு சிந்திக்க தெரியாதா? அல்லது சிந்திப்பது போன்று நடிக்கிறாயா? இந்த சமூகத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. உறங்குவது போன்று இருக்கின்றதா? அல்லது உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றதா? என்று புரியவில்லை.


சமூகமே நீ ஒரு நல்ல தலைவனை உன்னிலிருந்து  உருவாக்கும் வரை உமக்கு விதிக்கப்பட்ட அடிமைத்தன சாபக் கேடும் அழிந்துபோகும் பிணவாடையும் உம்மை விட்டுப் போகாது. சற்று சிந்தித்துப் பார் சமூகமே!.


இந்தக் கொடுமைகளுக்கு முக்கியக்காரணம் நீ தேர்வு செய்யும் தலைமைகள் சரியில்லை என்பதே உண்மை. உமக்கு சேவை செய்ய வேண்டும் என்று வந்தவர்கள் எல்லாம் அவர்களுக்கு தேவை செய்து கொண்டு., உங்களை அடிமைத்தனத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் பலர் இந்த குளவி கொட்டில்,,  இயற்கை சீற்றத்தில்  இறந்து போனாலும் இந்த சமூகம் திருந்தப் போவதில்லை. திரும்பவும் இந்த தலைமைகளே விரும்பும்.


சமூகமே இந்த ஆபத்துகளுக்கு தீர்வே இல்லையா? தீர்வைப் பெற்றுக்கொடுக்க தலைமைகள் இல்லையா? அறிக்கையில் மட்டும் அடுத்தடுத்து அடுக்கி அள்ளித்தலும் தலைமைகளே!, இந்த மலையக மக்களின் உயிர்காக்கும் படலத்திற்கு என்ன விடை தரப் போகிறீர்கள்?.


மலையக தலைமைகள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து மலையக மக்கள் அழிந்து விட வேண்டும் என்று அள்ளிப் போட்டு விடுங்கள் வாக்கி  அரிசியை. கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதைவிட ஒட்டுமொத்தமாக கொள்வது சாலச் சிறந்தது.


என்னடா குளவிக் கொட்டுக்கு அரசியல் தலைமைக்கும் முடிச்சு போடுகின்றார் என்று நினைக்கின்றீர்களா? இந்தியத் தலைவர் இலங்கை வரும் போது குளவிகளை அளிக்க தெரிந்த நீங்கள் எங்கள் மக்கள் நான்கு பேர் மரணித்தும் கூட குளவிகளை அப்புறப்படுத்த முனையாதது ஏனோ? காலம் பதில் சொல்லும் .


என் மக்களே! இனிவரும் காலங்களிலும் இந்த தலைவர்களுக்கே வாக்களியுங்கள். இவர்கள் தான் உங்களை அடிமையாக வைத்துக் கொள்வதற்கு சரியான தலைவர்கள். அடிமைத்தனம் வாழ்க. அடிமைத்தனத்தை அடுத்த தலைமைக்கு அதையே விதைத்து செல்லுங்கள். சிந்திப்போம் செயற்படுவோம்.

Comments