அது ஒரு கணா காலம்…

இருபதாம் நூற்றாண்டு இறுதியில ஸ்கூல் வாழ்கைக்கும் 2000 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களின் ஸ்கூல் வாழ்க்கைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது…

ஞாபகம் வருதானு பாருங்க…



● முன்ன பொறந்த நாள்னா டொபி கொஞ்சம் வாங்கிட்டு ஸ்கூல்ல எல்லா டீச்சர்ஸ் கிட்டயும் குடுத்து வாழ்த்து வாங்கி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கி நம்ம க்ளாஸ் பசங்களுக்கு மட்டும் கைகுடுத்து கொண்டாடுறது எவ்வளவு பெரிய ஆனந்தம்…..

●புது புத்தகம் கெடச்சதும் எல்லாத்தயும் பொரட்டி பொரட்டி அந்த கலர் கலர் படங்கள வார்த்தயில்லாம பார்த்து ரசிச்சி அனுபவிக்கிற சுகத்திற்கு என்ன பேர்னு தெரியாது….

●நடராஜா கொம்பஸ்,அதுல உள்ள ரேசர் அந்த வாசம் இப்ப நெனச்சாலும்  நெஞ்சே இனிக்குது…

●சிகப்பு கலர் சின்ன சிடிபி பஸ்…புல் வைபரேட்ல அவ்வளவு கண்ணாடியும் கிடுகிடுனு ஒரு சத்ததோட வரும்.அதுல கண்டக்டர்கிட்ட பேனாவுல குத்துவாங்கி முண்டி அடிச்சி முன்னுக்கு டரைவர் சீட்டுக்கு பின்னுக்கு ஒரு காலி எடம் அதுல போய் நின்னு அவரு ஓட்ரத பாத்துட்டே இருக்குற நென்ப்பு அப்பப்பா…..

●2.50 சதம் படங்கள் இருக்குற ஒரு சீட்..வெத வெதமா தேடி வாங்கி ஒட்டுறது அம்மா அப்பா சொல்லி இல்ல நம்மலே செஞ்சிருக்கம்,இப்ப ஒரு புள்ள இல்ல தனியா இப்டியெல்லாம் செய்ய…

முக்கியமான ஒன்ன மறந்துட்டன்…

●எதுல அந்த காட் கெடய்க்கும்னே மறந்துட்டன்…கிரிகடர்ஸ் இருக்குற காட்…நாங்க அதுக்கு டொஸ் போடுவம் ஒவ்வொருத்தன்கிட்டயும் கட்டு கட்டா காட் வச்சிருப்பம்…

ஆனா அந்த காலத்துலயே நாங்க விஜய் அஜித் காட் எல்லாம் சேர்க்கவே மாட்டம்…

அப்பறம்…

●கொஞ்சம் வளர்ந்த ஸ்கூல் காலத்துல ஸ்கூல் முடிஞ்சதும் ஒரு எடம் இருக்கு அங்கதான் போவம்.வேற ஒன்னுமில்ல சண்ட போட்டுக்க…நா எல்லாம் அப்பவே பெரிய பார்வையாளன்தானுங்க…

●இன்னொரு விஷயம் சீசன் எடுக்குற நாள்…..நெனச்சி பார்க்க முடியுது…

●டவுன் ஸ்கூல்ல போய்டு எஸ்டேட்ல நாங்க குடுக்குற சீனு இருக்கே அது வேற லெவல் சின்ன காலம் புரியல எதுவும்…

●எவ்வளவு சநதோஷமா இருந்தமோ அதே மாறி டீச்சர்ஸ்க்கும் பெரியவங்களுக்கும் மரியாதயும் பயமும் எப்போதும் எங்களிடம் இருந்தது….

ஸ்கூல் லவ்..அத வேறயா எழுதனும்…

இருபதாம் நூற்றாண்டு இறுதியில ஸ்கூல் வாழ்கைக்கும் 2000 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களின் ஸ்கூல் வாழ்க்கைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது…

அது ஒரு கணா காலம்…

Comments